Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் – க்யூட் வீடியோ

நடிகர் அஜித் சென்னை ரேஸ் ட்ராக்கில் குடும்பத்துடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MIKA Go Kart Circuit என அழைக்கப்படும் மெட்ராஸ் சர்வதேச கார்டிங் அரங்கத்தில் அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி மற்றும் மகன் இருக்கும் புகைப்படங்களை அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

Ajith Kumar

இந்த பதிவில் அஜித்தை விட அதிக கவனம் பெற்றுள்ளார் ஆத்விக். இதுவரை ஃபுட்பால் பிளேயராக அறியப்பட்ட 9 வயது ஆத்விக், ரேஸ் காரில் அமர்ந்திருக்கும் வீடியோவை அஜித்குமார் ரேஸிங் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஆத்விக்குக்கு அஜித் கார் ரேஸ் பற்றி அறிவுரை கூறும் தந்தை-மகன் மொமென்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஷாலினியுடன் ஆத்விக்

சமீப காலங்களில் சினிமாவுக்கு இணையாக கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். Ajith Kumar Racing குழுவுடன் அவர் பங்கேற்ற துபாய் 24 மணிநேரப் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஐரோப்பாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த ஆண்டு கார் ரேஸ் சீசன் முழுவதுமே களத்தில் இருக்கப்போவதாகவும் பேசியுள்ளார். இந்த ஆண்டு ஏற்கெனவே அவரது விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.

அடுத்ததாக வரும் 10ம் தேதி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இப்போது தந்தையும் மகனும் சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டை அருகில் உள்ள ரேஸ் ட்ராக்கில் பயிற்சியில் ஈடுபடுவதும் ஷாலினி அதை ஊக்குவிப்பதும் வீடியோவாகப் பதிவிட்டிருக்கிறார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.