சென்னை: உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்குத்தான் கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் மறுஆய்வு செய்யக்கோரிய மனு மீது ஏப்ரல் 8-ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல், ஜூன் மாதம் இறுதி வரை, வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. இந்த உத்தரவுக்கு […]
