எம்எஸ் தோனி கடைசி ஐபிஎல் போட்டி இன்று? சேப்பாக்கத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி

MS Dhoni Retirement Today : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்எஸ் தோனி ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெறுவது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறப்போகிறார் என தகவல் கசிந்துள்ளது. அதனால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி களமிறங்குவார் என்றும், இதுவே அவர் கடைசியாக சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டி என்றும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி போட்டியில் விளையாடப்போகும் எம்எஸ் தோனி, அப்போட்டியில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டை சிஎஸ்கே நிர்வாகம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தோனி திடீர் ஓய்வு முடிவு ஏன்?

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் உள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றைய போட்டியின் முடிவில் அந்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பதால் தோனியின் முடிவை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். சிஎஸ்கே அணிக்காக கடந்த போட்டியில் தோனி முன்கூட்டியே களம் இறங்காதது மிகப்பெரிய விமர்சனமாக மாறிய நிலையில், தோனி இந்த ஓய்வு முடிவை எடுத்துவிட்டதாக தெரிகிறது. அவர் ஏற்கனவே ஓய்வு பெற தயாராக இருந்தபோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வற்புறுத்தலின்பேரிலேயே ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பு

இருப்பினும் அணியின் நலன் கருதி ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்துக்கு தோனி வந்துவிட்டதால் இனியும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட வேண்டாம் என தோனி முடிவெடுத்துள்ளார். அதன்படி  இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியுடன் முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை கொடுக்க இருக்கிறார். அதுவும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஓய்வு பெற வேண்டும் என்பது தோனியின் ஆசை. அதற்கு சிஎஸ்கே நிர்வாகமும் இசைவு தெரிவித்துவிட்டதால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடியும்போது எம்எஸ் தோனி தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அஸ்வின் நண்பர் கொடுத்த தகவல்

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினின் நெருங்கிய நண்பரான பிரசன்னா, இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மறைமுகமாக எழுதியுள்ளார். சனிக்கிழமை நடைபெறும் போட்டி அவருக்கு கடைசியாக இருக்கலாம் என தெரிவித்துள்ள பிரச்சனா, அது அவருடைய கடைசி போட்டியாக இருக்காது என நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் கூறியுள்ளார். அதாவது, “Hopefully Definitely Not” என முன்பு ஒருமுறை ஓய்வு குறித்து தோனியிடம் கேட்டபோது அவர் சொன்ன இந்த வார்த்தையை குறிப்பிட்டு எழுதியுள்ளார் பிரசன்னா. அதன் காரணமாகவே தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரா? என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.