பாங்காக்,
வங்காள விரிகுடா கடலை எல்லையாக கொண்டுள்ள இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய 7 நாடுகள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளன. பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) என்று இந்த கூட்டமைப்பு அழைக்கப்படுகிறது.
இதனிடையே, பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6வது உச்சிமாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டை நிறைவு செய்த பிரதமர் மோடி தாய்லாந்தில் இருந்து இலங்கை புறப்பட்டார். 3 பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் மோடி 6ம் தேதி பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுரா குமார தசநாயக, பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரியா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
இந்த பயணத்தின்போது இந்திய நிதி உதவியுடன் திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 2015ம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.