மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 19 கோட்டங்களில் இன்று சிறப்பு முகாம்

சென்னை: தமிழக மின்​சார வாரி​யம், மின்​சா​ரம் தொடர்​பான புகார்​களுக்கு தீர்வு காண்​ப​தற்​காக, இன்று (ஏப். 5) காலை 11 மணி​முதல் மாலை 5 மணிவரை தமிழகத்​தில் உள்ள அனைத்து மின்​வாரிய செயற்​பொறி​யாளர்​கள் அலு​வலங்​களி​லும் ஒரு​நாள் சிறப்பு முகாம் நடத்த ஏற்​பாடு செய்​துள்​ளது.

சென்​னை​யில் 19 கோட்​டங்​களில் இந்த சிறப்பு முகாம் நடை​பெறுகிறது. இதன்​படி, மயி​லாப்​பூர் கோட்​டத்​தில், வள்​ளுவர் கோட்​டம் துணைமின் நிலையம், எழும்​பூர் கோட்​டத்​தில், எழும்​பூர் துணைமின் நிலையம், அண்ணா சாலை கோட்​டத்தில் சிந்​தா​திரிபேட்​டை, தி.நகர் கோட்டத் தில் மாம்​பலம் துணை மின் நிலையம், பெரம்​பூர் கோட்​டத்​தில் செம்​பி​யம் துணைமின் நிலைய வளாகத்தில் நடை​பெறுகிறது.

இதே​போல், தண்​டை​யார்​பேட்டை கோட்​டத்​தில் தண்​டை​யார்​பேட்​டை, வியாசர்​பாடி கோட்​டத்​தில் வியாசர்​பாடி தொழிற்​பேட்டை துணைமின் நிலைய வளாகம், பொன்​னேரி கோட்​டத்​தில், வெண்​பாக்​கம் துணைமின் நிலைய வளாகம், அம்​பத்​தூர் கோட்​டத்​தில் எஸ்டேட் துணைமின் நிலைய வளாகம், ஆவடி கோட்​டத்​தில் ஆவடியிலும், அண்ணா நகர் கோட்​டத்​தில் 11-வது பிர​தான சாலை, கிண்டி கோட்​டத்​தில் கே.கே.நகர், போரூர் கோட்​டத்​தில் எஸ்​.ஆர்​.எம்​.சி. துணைமின் நிலைய வளாகம், கே.கே.நகர் கோட்​டத்​தில் கே.கே. நகர், அடை​யாறு கோட்​டத்​தில் வேளச்சேரி துணைமின் நிலைய வளாகம், தாம்​பரம் கோட்​டத்​தில் புதுத்​தாங்​கல் துணைமின் நிலையவளாகம், சோழிங்​கநல்​லூர் கோட்​டத்​தில் துணைமின் நிலைய வளாகம், குளோபல் மருத்​து​வ​மனை அரு​கில், சேரன் நகர், பல்​லா​வரம் கோட்​டத்​தில் துணைமின் நிலைய வளாகம், ஐ.டி.​காரி​டார் கோட்​டத்​தில்டைடல் பார்க் துணைமின் நிலைய வளாகத்தில் நடை​பெறுகிறது. இதில் மின் நுகர்​வோர் பங்​கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.