மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் சிக்கல்! சூர்யகுமார் யாதவ் கடும் அதிருப்தி

Mumbai Indians News Tamil : ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி இப்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2025 தொடரில் மூன்றாவது தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியில் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பிளேயர்கள் இருக்கும் நிலையில், தோல்விகளை சந்திப்பது ஏன்? என பலரும் கேள்வியாக முன்வைத்த நிலையில் அதற்கான விடை இப்போது தகவலாக வெளியாகியுள்ளது. அந்த அணிக்குள் இப்போது சுமூகமான சூழல் இல்லை என்ற தகவல் பரவி வருகிறது. பிளேயர்கள் மற்றும் அணி நிர்வாகம் இடையே ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவர் முடிவில் திடீரென திலக் வர்மா, மைதானத்தில் இருந்து பாதியில் வெளியேறுமாறு அணி நிர்வாகம் கூறியது பிளேயர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டினார். திலக் வர்மாவை 19வது ஓவர் முடிந்ததும் யார் களத்தில் இருந்து வெளியே வரச் சொன்னது? கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த முடிவை எடுத்தாரா? அல்லது பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்த்னே இந்த முடிவை எடுத்தாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

இத்தனைக்கும் ஹர்திக் பாண்டியா, திலக் வர்மாவுடன் இணைந்து மைதானத்தில் ஆடிக் கொண்டிருந்தார். அதனால் அவரின் ஒப்புதல் இல்லாமல் நிச்சயம் திலக் வர்மா மைதானத்தில் இருந்து வெளியேறியிருக்க வாய்ப்பு இல்லை. பாண்டியா கூறியதாலேயே திலக் வர்மா ரிட்டையர்டு ஹர்ட் என போட்டியில் இருந்து வெளியேறியிருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே தன்னுடைய பேட்டியில் நான் தான் கடினமான முடிவை எடுத்ததாக தெரிவித்தார். அவரின் இந்த பேட்டிக்குப் பிறகு ஏன் அவர் அப்படியான முடிவை எடுத்தார்? என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வருகின்றனர். 

ரோகித் சர்மா கடைசி நேரத்தில் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கம், திலக் வர்மாவை ரிட்டையர்டு ஹார்த் ஆக வைத்தது ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளதை வெளிப்பட்டுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மீது அதிருப்தியில்தான் இருக்கிறார். கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது சில பிளேயர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனையெல்லாம் வைத்து கூட்டி கழித்து பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்க்காமல் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவது இயலாத காரியமாகும். இது குறித்து அணி நிர்வாகம் இப்போது ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.