ஐ.பி.எல் தொடரின் நேற்றையைப் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.
இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய ரிஷப் பண்ட், “இந்த மைதானம் உண்மையிலேயே விளையாடுவதற்கு மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே மைதானம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கணிக்கத் துவங்கினோம்.

அதற்கு ஏற்ற மாதிரி விளையாடியதால் எங்களால் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தது. மிட்சல் மார்ஷ் போன்ற அதிரடியான துவக்கத்தை ஒரு வீரர் அளிக்கும் போது அது மிடில் ஆர்டரில் விளையாடுபவர்களுக்கு இன்னும் போட்டியை எளிதாக்குகிறது.
அந்த வகையிலேயே இந்த போட்டியில் நாங்கள் சூழலைக் கணித்துச் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். அதேபோன்று மும்பை அணியும் இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பாக விளையாடியது.
இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் இறுதி நேரத்தில் அழுத்தத்தை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அட்டகாசமாகப் பந்துவீசி வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.
இந்த போட்டியில் ஷர்துல் தாகூர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். அவரைத் தேர்வு செய்தது ஒரு அற்புதமான விஷயம்.

அந்த அளவிற்கு ஷர்துல் தாகூர் சிறப்பாகப் பந்துவீசி எங்களது அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார். அதேபோன்று திக்வேஷ் எங்களது அணியில் மிகச் சிறப்பான பவுலர்களில் ஒருவர். இறுதி நேரத்தில் அவரும் அழுத்தத்தைச் சிறப்பாகக் கையாண்டு வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகச் செயல்பட்டிருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs