2025 மாருதி சுசூகி வேகன் ஆர் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை விவரம்.!

மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற வேகன் ஆர் காரில் உள்ள முக்கிய வசதிகள், எஞ்சின் விபரம், மைலேஜ் மற்றும் வேரியண்ட் வாரியான ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.


இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற பிரபலமாகியுள்ள வேகன் ஆர் காரில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் இரண்டு ஏர்பேக்குகளை பெற்று ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்பி ஆகியவற்றை பெற்று ஹார்டெக்ட் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki WagonR on-road price

வேகன்ஆர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.64 லட்சம் முதல் ரூ.7.47 லட்சம் வரை அமைந்துள்ளது. இந்த காரின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது. சிஎன்ஜி வேரியண்ட் ஆன்-ரோடு விலை ரூ.7.93 லட்சம் முதல் ரூ.8.46 லட்சம் வரை, 1.0 லிட்டர் பெட்ரோல் மேனுவல் ரூ.6.87 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் வரை, 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் ரூ.7.78 லட்சம் முதல் ரூ.8.47 லட்சம் வரையும், 1.0 லிட்டர் ஏஎம்டி கியர்பாக்ஸ் ரூ.7.97 லட்சம் மற்றும் 1.2 லிட்டர் ஏஜிஎஸ் மாடல் ரூ.8.35 லட்சம் முதல் ரூ.9.10 லட்சம் வரை அமைந்துள்ளது.

Variant  Ex-showroom Price  on-road Price 
WAGON R LXi 1.0l MT Rs 5,64,500 Rs 6,86,530
WAGON R 1.0l VXi MT Rs 6,09,500 Rs 7,37,765
WAGON R 1.2l ZXi MT Rs 6,38,000 Rs 7,77,920
WAGON R 1.2l ZXi+ MT Rs 6,85,499 Rs 8,34,310
WAGON R 1.2l ZXi+ MT DT Rs 6,97,500 Rs 8,46,678
WAGON R 1.0l VXi AGS Rs 6,59,500 Rs 7,96,715
WAGON R 1.2l ZXi AGS Rs 6,88,000 Rs 8,35,054
WAGON R 1.2l ZXi+ AGS Rs 7,35,500 Rs 8,91,541
WAGON R 1.2l ZXi+ AGS DT Rs 7,47,499 Rs 9,09,543
WAGON R LXI 1.0l S-CNG Rs 6,54,500 Rs 7,92,653
WAGON R LXI 1.0l S-CNG Rs 6,99,500 Rs 8,45,680

(on-road price Tamilnadu)

கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.

வேகன் ஆர் எஞ்சின் மற்றும் மைலேஜ் விபரம்

1.0 லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 67hp பவர் மற்றும் 89Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் உள்ளது. கூடுதலாக சிஎன்ஜி மாடல் 56.7hp மற்றும் 82.1Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் மட்டும் உள்ளது.

1.2 லிட்டர், 4-சிலிண்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 89.7hp பவர் மற்றும் 113Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் உள்ளது.

Engine Manual Automatic (AGS)
1.0L Petrol engine 24.35 kmpl 25.19 kmpl
1.2L petrol engine 23.56 kmpl 24.43 kmpl
1.0L S-CNG engine 33.47 km/kg

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.