ஐபோன் வாங்க போறீங்களா? ஷாக் நியூஸ்.. அதிகரிக்கும் கட்டணம்!

iPhone 16 Series Price : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய கட்டணத்தை அமல்படுத்திய பிறகு, தற்போது ஆப்பிள் பிரியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. சமீபத்தில், ஆய்வாளர் ஒருவர் ஐபோன் 16 சீரிஸின் விலைகள் 30 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்து இருந்தார். ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்திக்கு சீன வசதிகளை பெரிய அளவில் நம்பியிருப்பதால், இனி புதிய கட்டணங்கள் ஆப்பிள் நிறுவனத்தை நேரடியாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் விலை $350 (இந்திய மதிப்பீடில் சுமார் ரூ. 30,000) வரை அதிகரிக்கக்கூடும் என்று யுபிஎஸ் ஆய்வாளர் சந்தீப் கங்கோத்ரி மதிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் இந்த போனின் ஆரம்ப விலை $1550 (இந்திய மதிப்பீடில் சுமார் ரூ.133648) ஆக இருக்கும். எனினும் தொடர்பான தகவலை இன்னும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை, இவை ஆய்வாளரின் மதிப்பீடு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தனியார் செய்தி நிறுவனமான CNBC அறிக்கையின்படி, iPhone 16 Pro-வின் விலை $120 (இந்திய மதிப்பீடில் சுமார் ரூ. 10,347) அதிகரிக்கக்கூடும். ஏனெனில் தற்போது டொனால்ட் டிரம்ப் விதித்த கட்டணங்களில் சில சுமைகளை நிறுவனம் சுமக்கக்கூடும், அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் மீது சில சுமைகளை சுமத்துவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்கள் மீது சுமை அதிகரிக்கும்:
டிரம்ப் தற்போது போட்டுள்ள வரிகளின் தாக்கத்தின் காரணமாக ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மீது சுமை அதிகரிக்ககூடும், மேலும் நிறுவனத்தின் விற்பனை குறையக்கூடும். இதனிடையே ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை ஏற்கனவே பல சந்தைகளில் மந்தமாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் நிறுவனத்தின் அம்சங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாததே. அத்தகைய சூழ்நிலையில், டிரம்ப் கட்டணத்தின் சுமை வாடிக்கையாளர்கள் மீது விழுப்போகும் பட்சத்தில், மக்கள் சாம்சங் உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கு மாறத் திட்டமிடலாம்.

இதனிடையே சில காலத்திற்கு முன்பு, Rosenblatt Securities ஐபோனின் விலையானது ரூ.2 லட்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவித்திருந்தது. அதே நேரத்தில், நிறுவனத்தின் சிறந்த மாடலுக்கு நீங்கள் 2300 டாலர்கள் (இந்திய மதிப்பீடில் சுமார் ரூ. 198334) செலவிட வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். ஆப்பிளின் மிகப்பெரிய சந்தைகள் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களில் உள்ளது, எனவே தற்போது நிறுவனம் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.