அந்தமானில் உள்ள பழங்குடியின தீவுக்கு தடையை மீறிச் சென்ற அமெரிக்க யூ-டியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் வெளி உலகத்தோடு தொடர்பில்லாமல் தனிமைப்படுத்திக் கொண்ட ஒரு பழங்குடி இனம் சென்டினலீஸ் பழங்குடி இனம். பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிவாசிகளைப் போன்ற ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து வரும் இவர்கள் அந்த தீவிற்குள் வரும் வெளிநபர்களை மூர்க்கமாகத் தாக்கி கொன்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலமுறை இவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த […]
