ஆர்சிபி அணிக்கு திக் திக் வெற்றி.. மும்பைக்கு ஏமாற்றம்!

ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டிய பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஃபில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலியுடன் படிக்கல் கைக்கோர்த்தார். இந்த கூட்டணி அணிக்கு ரன்களை சேர்க்க தொடங்கியது. இருவரும் சேர்ந்து 91 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி அரைசதம் விளாசினார். இதையடுத்து படிக்கல் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து பட்டிதர் மற்றும் ஜிதேஷ் சர்மா சேர்ந்து ரன்களை குவிக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பாக டிரண்ட் போல்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களும் விக்னேஷ் புதூர் 1 விக்கெட்டையும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து மும்பை அணி 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. 

தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரிகில்டன் தலா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 28, வில் ஜேக்ஸ் 22 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் இதையடுத்து சேர்ந்த ஹர்திக் பாண்டியா – திலக் வர்மா கூட்டணி சிறப்பாக விளையாடியது. வெற்றியை நோக்கி கொண்டு சொல்கின்றனர் என நினைத்த நிலையில், திலக் வர்மா 56 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி கொண்டு சொல்லும் நிலையில், இவர்கள் இருவரையும் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஸ் ஹெசில்வுட் ஆகியோர் விக்கெட்களை எடுத்து ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்தனர். இறுதிவரை திக் திக் என சென்ற இந்த போட்டியில் மும்பை அணி ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இதன் மூலம் ஆர்சிபி அணி இந்த தொடரில் 3வது வெற்றியை பெற்றது. 

மேலும் படிங்க: லக்னோ – கொல்கத்தா நாளை மோதல்.. வெல்லப்போவது யார்? பிளேயிங் 11 இங்கே!

மேலும் படிங்க: ஜஸ்பிரித் பும்ரா to அஷிஷ் நெஹ்ரா: ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 7 வீரர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.