'ஏழு கடல் தாண்டி உனக்காக…'- காதலனைச் சந்திக்க ஆந்திராவின் குக்கிராமத்திற்கு வந்த அமெரிக்கப் பெண்

கடல் கடந்து தனது காதலனைத் தேடி ஆந்திராவில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு வந்திருக்கிறார் அமெரிக்கப் பெண் ஒருவர்.

அமெரிக்கரான ஜாக்லின் ஒரு புகைப்படக் கலைஞர். ஆந்திராவில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் சந்தன். இருவரும் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழகி இருக்கின்றனர்.

ஜாக்லின்- சந்தன்
ஜாக்லின்- சந்தன்

சந்தனின் எளிமை, இசை, புகைப்படக் கலை ஆகியவை ஜாக்லினிற்கு மிகவும் பிடித்துப்போக இவர்களின் நட்பு, காதலாக மாறி இருக்கிறது. இந்நிலையில் சந்தனைச் சந்திப்பதற்காக ஆந்திராவிற்கே வந்திருக்கிறார் ஜாக்லின். திருமணம் செய்துக்கொள்ள இருவரும் தங்களது வீட்டில் அனுமதி கேட்டிருக்கின்றனர். அவர்களின் பெற்றோரும் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர்.

இருவருக்கும் 9 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தாலும் பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப்போவதால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம் என 45 நிமிட வீடியோ ஒன்றைத் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.