நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கில் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து சாய் சுதர்சனுடன்ம் ஜோஸ் பட்லர் கைகோர்த்தார். இந்த கூட்டணி குஜராத் அணிக்கு ரன்களை சேர்த்தது. 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எட்டிய இந்த கூட்டணியை தீக்ஷனா பிரித்தார். ஜோஸ் பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுபக்கம் நிலைத்து நின்ற சாய் சுதர்சன் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினார். அவருடன் சாருக் கானும் ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்தில் சாருக் கான் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ரதர்ஃபோர்ட் 7, சாய் சுதர்சன் 82 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் குஜராத் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக தீக்ஷனா மற்றும் தேஷ்பாண்டே அதிகபட்சமாக தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் அந்த அணிக்கு எதிர்பார்த்த பேட்டிங் கிடைக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தனர். அதிகபட்சமாக சாம்சன் 41 ரன்களும் ஹெட்மேயர் 52 ரன்களும் ரியான் பராக் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் வெளியேறினர்.
இதனால் அந்த அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத் டைட்டன்ஸ் சார்பாக பந்து வீச்சில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்களையும் ரஷித் கான் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்களையும் சிராஜ், அர்ஷத் கான் மற்றும் குல்வந்த் கெஜ்ரோலியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன் மூலம் குஜராத் அணி இத்தொடரில் 4வது வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி 8 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: அஷ்வானி குமார் to அல்சாரி ஜோசப்: ஐபிஎல்லின் முதல் போட்டியிலேயே அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள்!