கலக்கப் போவது யாரு’, ‘அது இது எது” முதலான நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன் – மரியா தம்பதிக்குச் சென்னையில் இன்று (ஏப்ரல் 9) வளைகாப்பு நடந்தது.
சின்னத்திரை நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொண்டு ஜோடியை வாழ்த்தினர்.
நாஞ்சில் விஜயன் ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டி வந்தார். தொடர்ந்து சீரியல்களிலும் நடித்தார்.
கடைசியாக, ‘கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘வள்ளி திருமணம்’ சீரியலில் நடித்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகளும் வந்தன. தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறாராம்.
இவருக்கும் மரியா மேக்ரினா என்பவருக்கும் கடந்த 2023 செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரியா தாய்மையடைந்தார். இதைத் தொடர்ந்து இன்று மரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கத்தில் நடந்தது.
ரோபோ சங்கர் குடும்பத்தினர் நடனமாடியடி சீர் பொருட்களைக் கொண்டு வந்து மரியாவுக்கு வளையல் போட்டு விட்டனர்.
நடிகர் அமித் பார்கவ்-ஶ்ரீஞ்சனி ஜோடி, நடிகை நளினி, நடிகர்கள் தாடி பாலாஜி, புகழ், சாய் சக்தி, ஈரோடு மகேஷ், அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் என டிவி நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொண்டு ஜோடியை வாழ்த்தினர்.

பாட்டுக் கச்சேரி ஒருபக்கம், சீமந்தச் சாப்பாடு மறுபக்கம் எனக் கூட்டம் ஜே ஜே என இருந்த சூழலிலும் விஜயனிடம் சில வார்த்தைகள் பேசினோம்.
”ரொம்ப சிம்பிளா வைக்கலாம்னு தான் முதல்ல நினைச்சேன். ஆனா நண்பர்கள் ‘அப்படில்லாம் விட்டுடுவோமா’னு கேட்டதால சரினு பெரிய மண்டபத்தைப் பிடிச்சு வச்சாச்சு.
கடவுள் ஆசிர்வாதத்துல நாங்க அப்பா அம்மா ஆகப் போறோம். நளினி அம்மா, ரோபோ சங்கர் குடும்பத்தினர் இன்னும் சில நெருக்கமான நண்பர்களாலதான் எங்க திருமணம் நடந்தது.
திருமணத்துல கலந்துகிட்ட எல்லாரையும் இந்த நிகழ்ச்சியிலயும் பார்த்தது மகிழ்ச்சியா இருக்கு. சின்னத்திரை நடிகர் நடிகைகள் எல்லாருமே ஒரே குடும்பமா இருக்கோம்கிறத எங்க வளைகாப்பு மூலமா திரும்பவும் ஒரு தடவை நிருபீச்சிருக்கோம்’ என்றார் அவர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…