தொடர் விடுமுறை: 6 சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!

சென்னை: தமிழ் புத்தாண்டு, விஷு, புனித வெள்ளி மற்றும் கோடை விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் உள்பட ஆறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை – கன்னியாகுமரி: சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.10, 17 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06089) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து ஏப்.11, 18 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06090) புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை – கொல்லம்: சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06113) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து ஏப்.13, 20 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் (06114) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை – போத்தனூர்: சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.11-ம் தேதி இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06027) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து ஏப்.14-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06028) புறப்பட்டு, சென்னை சென்ட்ரலை காலை 8.20 மணிக்கு வந்தடையும்.

தாம்பரம் – போத்தனூர்: தாம்பரத்தில் இருந்து ஏப்.11, 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் மாலை 5.05 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06185) புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு போத்தனூரை சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து ஏப்.13, 20, 27, மே 4 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06186) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இதுதவிர, மங்களூர் சந்திப்பு- திருவனந்தபுரம் வடக்கு இடையே ஒரு சிறப்பு ரயிலும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே சிறப்பு ரயில், தாம்பரம் – போத்தனூர் இடையே சிறப்பு ரயில், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் ஆகிய ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (ஏப்.10) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மற்ற 3 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.