ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லின் சிறந்த அணிகள் என கருதப்படும் அணி எல்லாம் கடுமையாக சொதப்பி புள்ளிப்பட்டியலின் கீழ் வரிசையில் இருந்து வருகிறது. மாறாக எதிர்பார்க்கப்படாத அணிகள் அனைத்தும் முதல் 4 இடங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக எப்போது சிறப்பாக விளையாடும் சென்னை அணி இம்முறை 5 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங்கை டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமாங் பதானி கடுமையாக விமர்சித்து உள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய ஹேமாங் பதானி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக பிளமிங் இருக்கிறார். சென்னை அணி இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளது. இதற்காக அனைவரும் பாராட்டுகிறார்கள்.
ஆனால் நான் கூறுவேன், சிஎஸ்கே அணி வென்றதற்கு பிளமிங் ஒன்றும் காரணம் கிடையாது. அந்த அணியில் தோனி இருக்கிறார். அவரால் தான் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. பிளமிங் மட்டும் இருந்தால் சென்னை அணி நிச்சயம் இதனை கோப்பைகளை வென்றிருக்காது. பிளமிங் ஐபிஎல் மட்டுமல்ல அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடக்கும் லீக் ஆட்டங்களிலும் பயிற்சியாளராக இருக்கிறார்.
அந்த தொடர்களில் அவர் பயிற்சி அளிக்கும் அணி ஏதாவது கோப்பையை வென்றிருக்கிறதா? ஏதாவது சாதித்து இருக்கிறதா? எனவே பிளமிங் ஒரு நல்ல பயிற்சியாளர் என சொன்னால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஐபிஎல் தொடரிகளில் இருக்கும் அணிகளுக்கு இந்தியர்களையே பயிற்சியாளராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் ஐபிஎக் மேன்மேலும் வளரும் என தெரிவித்துள்ளார்.
ஹேமாங் பதானி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்படுகிறார். அவரை அந்த அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கும்போது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் மாறாக, டெல்லி அணி டெல்லி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இச்சூழலில் அவர் பிளமிங் குறித்து பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிங்க: ரஜத் படிதாருக்கு தண்டனை விதித்த பிசிசிஐ! ஆர்சிபி கேப்டனுக்கு இந்த நிலைமையா?
மேலும் படிங்க: ரச்சின், முகேஷ் நீக்கம்! இன்று சிஎஸ்கே அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!