மீண்டும் தகர்ந்ததா சிஎஸ்கே பிளேஆப் கனவு? ஐபிஎல் விதிகள் சொல்வது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி முள்ளன்பூரில் நடைபெற்றது. சென்னை அணிக்கு முக்கியமான இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் தொடர்ந்து நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை அணி. கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 27 ரன்கள் அடித்த போதிலும் தோல்வியை தழுவியுள்ளனர். இதனால் தற்போது புள்ளிப்பட்டியில் 9வது இடத்தில் உள்ளனர். கடைசி இடத்தில் ஹைதராபாத் அணியும், 8வது இடத்தில் மும்பை அணியும் உள்ளனர்.

மேலும் படிங்க: பயம்காட்டிய கொல்கத்தா அணி.. கடைசி நேரத்தில் லக்னோ த்ரில் வெற்றி!

கான்வே ரிட்டயர்டு அவுட்

இந்த சீசனில் சென்னை அணிக்கு தொடக்க ஜோடி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் இந்த போட்டியில் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடினர். 49 பந்துகளில் 69 ரன்கள் அடித்திருந்த நிலையில், டேவான் கான்வே ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா உள்ளே வந்தார். முந்தைய போட்டியில் திலக் வர்மா இதேபோல் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை அணியிலும் அதே போல ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் கேப்டன் ருதுராஜ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். “கான்வே சிறப்பான பிளேயர் என்றாலும், ஜடேஜா கடைசி நேரத்தில் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்.

சென்னை அணியில் ஜடேஜாவின் ரோல் இதுதான். கான்வே சில ஓவர்களாக பெரிய ஷாட்கள் அடிக்க சிரமப்பட்டு கொண்டிருந்தார். இதனால் ஏன் அவருக்கு பதில் ஜடேஜா இறங்க கூடாது என்று யோசித்தோம். இதனாலே அவர் ரிட்டயர்டு அவுட் ஆகி வெளியேற்றினார்” என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள சென்னை அணி, இந்த சீசன் முழுவதும் பீல்டிங் மற்றும் பேட்டிங் என தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிகள் சில கேட்சுகளை பிடித்திருந்தால் இந்த போட்டியை எளிதாக வென்று இருக்கலாம்.

இது குறித்து பேசிய ருதுராஜ், “நாங்கள் பல கேட்சை தவற விடுகிறோம். அந்த பேட்ஸ்மேன் 15, 20, 25 ஏன் சில சமயங்களில் 30 ரன்களை கூடுதலாக அடிக்கிறார். இது சேஸிங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆர்சிபி போட்டியிலும் சரி, டெல்லிக்கு எதிரான போட்டியிலும் சரி இதே தவறை தான் செய்தோம். இதனால் தான் போட்டியின் முடிவும் மாறியது. வெற்றி தோல்விக்கு 10,20 ரன்கள் தான் வித்தியாசம். உங்களுக்கு ஒரு மோசமான நாள் இருக்கலாம், ஆனால் உங்களுக்குத் தெரியும். ஃபீல்டிங்கில் எங்களது முழு திறனை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இப்போது அது நடக்கவில்லை,” என்று கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டியில், பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் அடித்து ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனி ஒருவராக போட்டியை மாற்றினார். தற்போது ஐந்து போட்டியில் விளையாடி நான்கில் தோல்வியை சந்தித்துள்ளார். இதனால் தற்போது சென்னை அணியின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட பறிபோகி உள்ளது. பிளே ஆப்க்கு தகுதி பெற இன்னும் மீதமுள்ள 9 போட்டிகளில் குறைந்தது 7ல் வெற்றி பெற்றாக வேண்டும்.

மேலும் படிங்க: பிளமிங்கால் ஒன்றும் csk கோப்பைகளை வெல்லவில்லை.. தோனிதான் காரணம் – ஹேமாங் பாதானி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.