ரூ.1.36 லட்சத்தில் 2025 யமஹா FZ-S Fi விற்பனைக்கு அறிமுகமானது | Automobile Tamilan

2025 ஆம் ஆண்டிற்கான புதிய யமஹா FZ-S Fi பைக்கல் கூடுதலாக புதிய நிறங்களுடன், பாடி கிராபிக்ஸ் மேம்பட்டதாக விற்பனைக்கு ரூ.1,35,539 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.


சமீபத்தில் வெளியான FZ-S Fi ஹைபிரிட் மாடலுக்கு கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ள புதிய மாடலின் அடிப்படையான எஞ்சின் பவர் மற்றும் உள்ளிட்ட மெக்கானிக்கல் சார்ந்தவற்றில் பெரிய மாற்றங்கள் இல்லை.

12.4PS பவர் மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற OBD-2B ஆதரவினை  149cc சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு, 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2025 மாடலில் பெட்ரோல் டேங்கின் எக்ஸ்டென்ஷன் பகுதியில் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு, முன்புறத்தில் டர்ன் இன்டிகேட்டர் ஆனது டேங்க் எக்ஸ்டென்ஷன் பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்பொழுது மெட்டாலிக் கிரே, மேட் பிளாக், ஐஸ்-ஃப்ளூ வெர்மில்லியன் மற்றும் சைபர் கிரீன் என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.

பல்வேறு தகவல்களை வழங்கும் எல்சிடி கிளஸ்ட்டருடன் Y-Connect ஆப் இணைப்புடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் , கால், எஸ்எம்எஸ் அலர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கின்றது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டதாகவும், 140 மிமீ ரேடியல் டயருடன் பின்பக்கம் 220 மிமீ டிஸ்க் மற்றும் முன்பக்கம் 282 மிமீ டிஸ்க்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக உள்ளது.

2025 yamaha fz s fi colours


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.