இயக்குநர் அட்லீ இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியாகி அதிரடியான வெற்றி பெற்றது ஜவான் திரைப்படம். பாலிவுட்டுக்கு சென்று இப்படத்தின் மூலம் ஷாருக்கானுக்கு ஹிட் கொடுத்தவர் அடுத்தும் பாலிவுட்டில் மற்றுமொரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல்களெல்லாம் பேசப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சமீப நாட்களாக அட்லீ, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து இயக்கவிருக்கிறார் எனப் பேசப்பட்டு வந்தது.

ஆனால், அட்லீயோ தனது அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக வீடியோவை மட்டும் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இதைத் தாண்டி திரைப்படம் தொடர்பாக எந்த விஷயத்தையும் அவர் எங்கும் பேசவில்லை.
தற்போது அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
அல்லு அர்ஜுனும் `புஷ்பா’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
படத்திற்கு `கட்சி சேர’, `ஆசைக்கூட’ போன்ற சுயாதீன பாடல்களின் மூலம் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூரவமான அறிவிப்பு வெளியாகவில்லை.

ராகவா லாரன்ஸின் `பென்ஸ்’ , சூர்யாவின் 45-வது திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிதக்கது.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
`அவென்சர்ஸ் – என்ட் கேம், கேப்டன் மார்வெல்’ போன்ற திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட `Lola VFX’ நிறுவனத்தில் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிறுவனத்தின் கிராபிக்ஸ் இயக்குநர் மேம்ஸ் மடிகன் இது தொடர்பாக பேசுகையில், “ நான் இப்போதுதான் படத்தின் முழுக்கதையை படித்து முடித்தேன். ஆனால், இன்னும் என்னுடைய தலை சுற்றிக் கொண்டிருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.
இவரை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் ஸ்பெஷல் மோஷன் துறையைச் சேர்ந்த மைக் எலிசால்ட் என்பவர், “ உண்மையாகவே, இந்தப் படத்தின் கதை இதற்கு முன்பு நான் பார்த்திடாத ஒன்று. நான் சிறந்த விஷயங்களை இந்தப் படத்திற்கு செய்துக் காட்ட வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார்.

மேலும், Fractured FX துறையின் தலைமை செயல் அதிகாரி பேசுகையில், “இந்தப் படத்தின் கதையைப் படிக்கும்போது கதாபாத்திரங்களின் திறன்கள் எனக்கு ஆர்வத்தை தூண்டியது.” எனப் பேசியிருக்கிறார்.
`Lola VFX’ நிறுவனத்தின் இணை உரிமையாளர் வில்லியம் ரைட் ஆண்டர்சன், “ இயக்குநரின் விஷன் எப்படியான விஷயங்களை ஏற்படுத்தப்போகிறது என்பதைக் காண ஆவலுடன் இருக்கிறேன். படத்தின் கதை கற்பனைக்கூட செய்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.
அட்லீயும் அல்லு அர்ஜூனும் இந்த கிராபிக்ஸ் நிறுவனத்தில் இருக்கும் விஷயங்களை சோதித்துப் பார்த்திருக்கிறார். அது தொடர்பான காட்சிகளையும் இந்தக் காணொளியில் இணைத்திருக்கிறார்கள்.
Gear up for the Landmark Cinematic Event⚡✨#AA22xA6 – A Magnum Opus from Sun Pictures@alluarjun @Atlee_dir #SunPictures #AA22 #A6 pic.twitter.com/MUD2hVXYDP
— Sun Pictures (@sunpictures) April 8, 2025
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…