D56: `வாள் தூக்கி நின்னான் பாரு' மீண்டும் இணையும் தனுஷ் x மாரி செல்வராஜ் கூட்டணி

இன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கர்ணன் படத்தின் 4 ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்ட நிலையில், இந்தக் கூட்டணி இணையும் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

D 56

இந்த படத்தின் அறிவிப்பில் படக்குழுவினர், “வேர்கள் தொடங்கிய பெரும் போர்” “Roots begin a Great War” எனக் குறிப்பிட்டு அறிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பான மாரி செல்வராஜின் பதிவில், “கர்ணனின் வாளால் உருவாக்கப்பட்ட பயணத்தின் 4வது ஆண்டைக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இத்தனை ஆண்டுகளாக கர்ணன் திரைப்படத்தை ஆதரித்த, கொண்டாடிய அனைவருக்கும் நன்றி.

Dhanush, Mari Selvaraj, Ishari Ganesh

மேலும், என்னுடைய அடுத்த திரைப்படமும் அன்புக்குரிய தனுஷ் சார் உடன்தான் என்பதை அறிவிப்பதில் உற்சாகமடைகிறேன். இது நீண்டநாட்களாக என் மனதில் ஊறிக்கொண்டிருந்த ஒரு விஷயம், மீண்டும் அவருடன் கைகோப்பதில் மிகவும் சந்தோஷம்.

இதுதான் நான் ஐசர் கணேஷ் சாருடன் இணையும் முதல் திரைப்படம், என்னால் இதைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இது மிகவும் சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கப்போகிறது.

இதோ வேர்கள் ஒரு பெரும் போரைத் தொடங்குகின்றன” எனக் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.