அறிமுக இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் நடிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், சீமான் (நா.த.க), சினேகன், கரு.பழனியப்பன், வசந்தபாலன், தேவயானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் ‘தம்பி’ படத்தின் தலைப்பில் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ எனக் குறிப்பிட்டிருந்தேன். அது என் தலைவர் பிரபாகரனைக் குறிக்கும் தலைப்பு. தன் மக்கள் மீது பேரன்பு கொண்ட அவர், தன் இனம் அழுத்தொழிக்கப்படும்போது பெருங்கோபம் கொண்டார். பேரன்பு இருக்கும் இடத்தில்தான் பெருங்கோபம் இருக்கும்.
தலைவருக்குப் பிடித்த இயக்குநர்
தலைவர் அவர்களைச் சந்தித்தபோது, அவர் என்னிடம் தமிழ் சினிமா இயக்குநர் குறித்துப் பேசினார். அப்போது, “எத்தணையோ பேர் கதை, வசனம் எழுதி படம் எடுக்கிறீர்கள், ஆனால் பாலு மகேந்திரா மாதிரி ஏன் எடுக்க முடியவில்லை” என்று என்னிடம் கேட்டார். இருவரும் ஒரே ஊர் என்பதால் அதை ஊர் பாசம் என்று நினைத்துக் கொண்டேன்.
தேவையற்ற சிறு நகர்கவுகள், காட்சிகள், வசனங்கள் எதுவும் இல்லாமல் கச்சிதமாக இருக்கும் பாலு மகேந்திரவின் திரைப்படங்கள்.

சாதிக்கு எதிராகப் பேசும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படம்
இப்படம் சாதிக்கு எதிராகப் பேசுகிறது. சாதிவெறி, ஆணவம் கொண்ட கூட்டத்திடம் பேரன்பு கொண்ட காதலர்கள் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும், பேரன்பு கொண்ட காதலன் பெருங்கோபம் கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் இப்படத்தின் கதை. ‘இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சாதி என்கிற சனியனை வச்சு எங்கள சாகடிப்பீங்க’ என்று அன்பு கொண்ட நெஞ்சங்கள் கெஞ்சுவதுதான் இந்தப் படம். நல்ல படத்திற்கு தயவு செய்து ஆதவு கொடுங்கள்” என்று பேசியிருக்கிறார் சீமான்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
