ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

ஆமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள்;-

குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ரூதர்போர்ட், ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மெயர், துருவ் ஜூரல், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, பசல்ஹக் பரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.