முல்லன்பூர்,
ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் சாஹல் ஒரு ஓவர் மட்டுமே வீசினார் . இந்த நிலையில் சாஹல் ஒரு ஓவர் வீசியதற்கு என்ன காரணம் என்பதை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஷிவம் துபே சற்று சிரமப்படுவார். அதனால்தான் நான் தொடர்ச்சியாக வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினேன் துபே இருக்கும்போது சுழற்பந்துவீச்சாளரை அழைக்க வேண்டாமென எனக்கு தோன்றியது; துபே ஆட்டமிழந்ததும் தோனி வந்ததால், அவருக்கு எதிராக யுஸ்வேந்திர சாஹலை கொண்டு வந்தேன். என தெரிவித்துள்ளார் .