Reliance Jio 98 Days Plan: இந்தியாவில் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல அற்புத திட்டங்களை வழங்கி வருகிறது. இவற்றில், குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ மிகவும் மலிவான திட்டத்தை வழங்கி வருகிறது. மேலும் ஜியோ 460 மில்லியனுக்கும் அதிகமான (46 கோடி) வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது ஜியோ தனது பயனர்களுக்கு விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களிலிருந்து நிவாரணம் அளிக்க புதிய மற்றும் சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஒவ்வொரு வகை பயனர்களுக்கும் அவர்களின் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு திட்டங்களை அறிமுகம் படுத்தி வருகிறது- குறிப்பாக OTT திட்டங்கள், ஜியோ போன் திட்டங்கள், ஜியோ பிரைமா போன் திட்டங்கள், கிரிக்கெட் சலுகைத் திட்டங்கள், டேட்டா பேக்குகள் மற்றும் பொழுதுபோக்கு தொகுப்புகள் போன்றவை இதில் அடங்கும். இதிலுருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப திட்டத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.999 திட்டம் | Reliance Jio ₹999 Plan
ஜியோவின் ரூபாய் 999 ரீசார்ஜ் திட்டத்தை பற்றி பேசுகையில், இந்த ரீசார்ஜ் திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் அன்லிமிடெட் காலிங் வசதியைப் பெறுவார்கள், இது அனைத்து லோக்கல் மற்றும் STD நெட்வொர்க்குகளுக்கும் பொருந்தும். கூடுதலாக, நீங்கள் ஒவ்வொரு நாளும் 100 இலவச SMS பெறுவீர்கள்.
தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்:
டேட்டாவைப் பற்றிப் பேசுகையில், இந்த திட்டம் அதிக இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், அதாவது மொத்த திட்டத்திலும் மொத்தமாக 196 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தக் கிடைக்கும். இது தவிர, 5G நெட்வொர்க் உள்ள பகுதிகளில் வசிக்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G தரவையும் பெறுவார்கள், அதுவும் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல்.
இந்தத் திட்டத்தில் 90 நாட்கள் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் வழங்கப்படுகிறது, இதன் மூலம் பயனர்கள் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களை எளிதாக அனுபவிக்க முடியும். மேலும், இந்த ரீசார்ஜ் மூலம் ஜியோ டிவிக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,049 திட்டம் | Reliance Jio ₹1,049 Plan
இது தவிர, ஜியோவின் மற்றொரு திட்டம் உள்ளது. அதன் விலை ரூபாய் 1,049 ஆகும். இந்த திட்டத்தில் பயனர்கள் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இந்த திட்டத்தில் 50 ஜிபி ஜியோஏஐ கிளவுட் சேமிப்பகமும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, இது ஜியோ ஹாட்ஸ்டாரின் 90 நாட்கள் மொபைல் சந்தாவுடன் வழங்குகிறது. இது தவிர பயனர்களுக்கு JioTV மொபைல் செயலி மூலம் ZEE5 மற்றும் SonyLIV-ஐயும் அணுகலாம்.