தோனியின் முன் இருக்கும் சவால்கள்…. சிஎஸ்கே பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்!

IPL 2025, CSK Playing XI Changes: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து தற்போது 9வது இடத்தில் உள்ளது. மும்பையை மட்டுமே அதுவும் சேப்பாக்கத்தில் வைத்துதான் சிஎஸ்கே வீழ்த்தியிருக்கிறது. தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்திருப்பதால் சிஎஸ்கே மீதும் எக்கச்சக்க விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

MS Dhoni: தோனியின் முன் இருக்கும் சவால்கள்

இந்த சூழலில், சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழுங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பேட்டிங் மேலும் பலவீனமடைந்திருக்கிறது. ருத்ராஜ் கெய்க்வாட்டை ஈடுசெய்ய தற்போதைய அணியில் யாருமே இல்லை எனலாம். 

இது ஒருபுறம் இருக்க, கேப்டன்ஸி மீண்டும் தோனியின் கைகளுக்கு போயுள்ளது. இது தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் அவரின் கைகளில், சீசனின் நடுவே மிகப்பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோனியின் முன் எக்கச்சக்க சவால்களும் இருக்கின்றன. இனி வரும் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில், தோனி கேப்டன்ஸியின் கீழ் ருதுராஜ் கெய்க்வாட் இல்லாமல் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு காணலாம்.

நம்பர் 3 யார்…?

ருதுராஜ் கெய்க்வாட் விலகியிருப்பதால் கொல்கத்தா அணிக்கு எதிரான நாளைய போட்டியில் நம்பர் 3 வீரர் யார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. தூபேவை கூட நம்பர் 3இல் விளையாட வைக்கலாம். தற்போதைக்கு ராகுல் திரிபாதியை தோனி களமிறக்குவாரா அல்லது வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத் போன்ற இளம் பேட்டர் ஒருவரை அணிக்குள் கொண்டுவருவாரா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. 

மிடில் ஆர்டரும் பிரச்னை

தற்போதைய சூழலில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, நூர் அமகது, பதிரானா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களே விளையாடுவார்கள் என்ற தெரிகிறது. எனவே சாம் கரன் அல்லது ஓவர்டனை சேர்க்க முடியாது. எனவே மிடில் ஆர்டர் பலவீனத்தை போக்கவும் வேறு வீரர்களை தோனி கொண்டுவர வாய்ப்புள்ளது. அஸ்வினை கூட நீக்கிவிட்டு தீபக் ஹூடா மீண்டும் உள்ளே கொண்டுவரப்படலாம். அன்ஷூல் கம்போஜ் அணிக்குள் வரவும் வாய்ப்புள்ளது. 

சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன்

டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் தூபே, ராகுல் திரிபாதி/வன்ஷ் பேடி, விஜய் சங்கர், ஷேக் ரஷீத்/ தீபக் ஹூடா, தோனி, ஜடேஜா, நூர் அமகது, கலீல் அகமது, முகேஷ் சௌத்ரி/அன்ஷூல் கம்போஜ். இம்பாக்ட் வீரர்: மதீஷா பதிரானா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.