சென்னை பாமகவுக்கு நானே தலைவர் என்று அறிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணியை நீக்கி அறிவித்து உள்ளார். இது பாமகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது பாமகவில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் மீதான நடவடிக்கை மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதில், மருத்தவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. […]
