பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது, அந்த சிறுமி 31 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதன் பின்னர் அந்த சிறுமி, கடந்த ஒரு ஆண்டு காலமாக தனது தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வந்ததாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உடனடியாக இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த சிறுமிக்கு 20 வயதில் ஒரு அக்காவும், 10 வயதில் ஒரு தம்பியும் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.