ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு

மாஸ்கோ: வரும் மே மாதம் 9-ம் தேதி நடை​பெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்​கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடை​பெற்ற இரண்​டாவது உலக போரில் ஜெர்​மனி​யும் அப்​போதைய சோவி​யத் யூனியனும் கடுமை​யாக மோதிக் கொண்​டன. பின்​னர் 1945-ம் ஆண்டு சோவி​யத் யூனியன் தாக்​குதலை சமாளிக்க முடி​யாத ஜெர்​மனி​யின் நாஜி படைகள் சரணடைந்​தன. அதன்​படி 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் தேதி பிரம்​மாண்​ட​மாக கொண்​டாட ரஷ்யா திட்​ட​மிட்​டுள்​ளது.

இந்த வெற்றி தின விழா​வில் பங்கேற்க இந்​திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார் என்று ரஷ்ய வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் ஆண்ட்ரே ருடென்கோ நேற்​று​முன்​தினம் தெரி​வித்​தார். பிரதமர் மோடி பங்​கேற்​ப​தற்​கான ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்டு வரு​கின்றன என்று ஆண்ட்ரே கூறி​னார்.

பிரதமர் மோடி​யும் அதிபர் புதினும் 2 மாதங்​களுக்கு ஒரு முறை​யா​வது தொலைபேசி​யில் பேசிக் கொள்​கின்​றனர். பிரதமர் மோடி கடந்த ஆண்டு ரஷ்ய பயணம் மேற்​கொண்​டார். அப்​போது அதிபர் புதினுடன் பல்​வேறு முக்​கிய விஷ​யங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார். பின்​னர் இந்​தி​யா​வுக்கு வரவேண்​டும் என்று புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்​தார். அதன்​படி அதிபர் புதின் இந்த ஆண்​டுக்​குள் இந்​தியா வருகை தரு​வார்​ என்​று ரஷ்ய வெளி​யுறவுத்​ துறை உறு​திப்​படுத்​தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.