6 மாத வேலிடிட்டி… அன்லிமிடெட் காலிங், அதிவேக டேட்டா – பிஎஸ்என்எல் நச் திட்டம்

BSNL Recharge Plans: பொதுத்துறை பிஎஸ்என்எல் கடந்த சில மாதங்களாகவே ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. குறைந்த விலையில் நிறைந்து சேவையை அளித்துவரும் பிஎஸ்என்எல் நிறுவனம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையிலான பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது.

BSNL Recharge Plans: குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்

இப்போது அனைவரும் இரட்டை சிம்களை வைத்திருந்தாலும், ஒரு சிம்மில் மட்டுமே தொடர்ச்சியாக ரீசார்ஜ் செய்து வருகின்றனர். காரணம், ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகமாகிவிட்டது. ஒரு சிம்மில் நீங்கள் ஆறு மாதத்திற்கு ரீசார்ஜ் செய்யாமல் வைத்திருந்தால் அது செயலற்றதாகிவிடும். எனவே வாடிக்கையாளர்கள் பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர்.

BSNL Recharge Plans: வாடிக்கையாளர்களை கவர புதிய வழி

இதன்மூலம், குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்தும் கொள்ளலாம், சிம்மும் செயலில் இருக்கும். அந்த வகையில் வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனமும் நீண்ட காலத்திற்கான ரீசார்ஜ் திட்டங்களை குறைந்த விலையில் வழங்க கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கொண்டு வந்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டமானது கோடிக்கணக்கான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

BSNL Recharge Plans: பிஎஸ்என்எல் ரூ.897 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவந்துள்ள புதிய ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.897 ஆகும். இதன் வேலிடிட்டி 180 நாட்கள், அதாவது ஆறு மாத காலமாகும். இதனை நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்வதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், இலவச இன்கம்மிங் கால்கள், ரோமிங் கால்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது இந்த திட்டத்திற்காக நீங்கள் ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் செலவிடுவீர்கள், அவ்வளவுதான்.

BSNL Recharge Plans: கஸ்டமர்களுக்கான பயன்கள்

இந்தத் திட்டத்தில் நூறு இலவச எஸ்எம்எஸ்-கள் தினமும் வழங்கப்படுகிறது. அதேபோல் மொத்தமாக 150 நாட்களுக்கு 90ஜிபி அதிவேக டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஒரு நாளுக்கு இத்தனை ஜிபி டேட்டா தான் என்று கணக்கு ஏதும் இல்லை. உங்கள் தேவையை பொறுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முழுமையாக 90ஜிபி டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்திவிட்டால் அதன்பின் அன்லிமிடெட் டேட்டாவை 40kbps வேகரத்தில் நீங்கள் பெறுவீர்கள்.

BSNL Recharge Plans: ஓடிடி சேவைகள்

இவை மட்டுமின்றி, இதில் ஓடிடி சேவையை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெறலாம். குறிப்பாக, BiTV-ஐ இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் 450க்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்களும் பல்வேறு ஓடிடி தளங்களும் கிடைக்கின்றன. இதன்மூலம், நீங்கள் குறைந்த விலையில் தரமான பொழுதுபோக்கு அம்சங்களையும் பெறலாம்.

BSNL Recharge Plans: விரைவில் 5ஜி சேவை

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி இணையத்தையே வழங்கி வருகிறது. வரும் ஜூன் மாதம் முதல் 5ஜி சேவையை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான தயாரிப்புகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 4ஜி இணையத்திற்கு ஒரு லட்ச டவர்களை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. அதில் 81 ஆயிரம் டவர்களை தற்போது வரை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | BSNL பெறும் ரூ.61,000 கோடி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு… மிக விரைவில் 5ஜி சேவை
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.