’இது என் கோட்டை டா’ சின்னசாமி ஸ்டேடியத்தில் விராட் கோலி முன் சீறிய கேஎல் ராகுல்..!!

KL Rahul Viral Video : ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், கேஎல் ராகுல் விராட் கோலியை பார்த்து சைகை செய்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தன்னுடைய சொந்த ஊரான பெங்களூரு மைதானம் என்னுடைய கோட்டை, இங்கு நான் தான் சிங்கம் என என்பதை போல, டெல்லி அணியின் வெற்றிக்குப் பிறகு கேஎல் ராகுல் சைகை செய்தார். அவர் ஏன் இப்படி செய்தார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

ஆர்சிபி – டிசி அணிகள் மோதல்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி – டிசி அணிகள் மோதின. நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேற்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றது. முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டெல்லி அணியில் அதிகபட்சமாக பெங்களூரு பையனான கேஎல் ராகுல் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். 

ஆர்சிபி அணி சொதப்பல் – டெல்லி கம்பேக்

முதலில் ஆர்சிபி பேட்டிங் ஆடும்போது 4வது ஓவர் முடிவதற்குள்ளாகவே 60க்கும் மேல் ரன்களை விளாசி அதிரடி வாணவேடிக்கைகளை காண்பித்துக் கொண்டிருந்தது. ஆர்சிபி அணியில் ஓப்பனிங் இறங்கிய விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இருவரும் அதிரடியாக ஆடினர். ஆனால் சால்ட் எதிர்பாரதவிதமாக ரன்அவுட் ஆக, அடுத்தடுத்து  ஆர்சிபி அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் 240 ரன்களுக்கு மேல் இன்னைக்கு ஆர்சிபி அடிக்கும் எதிர்பார்த்தவர்களுக்கு டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக 150 ரன்களை கடந்தாலே போதும் என்ற நிலைக்கு ஆர்சிபி வந்துவிட்டது. முடிவில் 163 ரன்களை மட்டுமே எடுத்தது.

விராட் கோலிக்கு கேஎல் ராகுல் பதிலடி

April 11, 2025

அடுத்து சேஸிங் இறங்கிய டெல்லி அணி முதல் மூன்று விக்கெட்டுகளை  30 ரன்களுக்கு உள்ளாகவே இழந்து பெரும் தடுமாற்றத்தில் இருந்தது. அப்போது கேஎல் ராகுல் முன்பாக டெல்லி அணியின் விக்கெட் விழுந்ததற்காக ஆக்ரோஷமாக ரியாக்ட் செய்தவாறு விராட் கோலி ஓடினார். இதனால் கடுப்பான கேஎல் ராகுல் நங்கூரமாக நிலைத்து நின்று விளையாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். மேலும், வின்னிங் ஷாட் அடித்தவுடன் பீல்டிங் நின்ற விராட் கோலியை பார்த்து மைதானத்தில் பேட்டில் ரவுண்ட் போட்ட கேஎல் ராகுல், இந்த மைதானம் என் கோட்டை என கோபமாக சைகை செய்தார். அவரின் இந்த ரியாக்ஷன் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.