IPL 2025, CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (ஏப். 11) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டி சேப்பாக்கத்தின் நம்பர் 5 ஆடுகளத்தில் விளையாடப்படுகிறது. இந்த ஆடுகளம் தான் நடப்பு தொடரில் சிஎஸ்கே – மும்பை அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்றால் முதலில் டாஸ் செய்வதே நல்லது என தமிழக வீரர் எல். பாலாஜி தெரிவித்திருந்தார்.
Match 25. CSK XI: D. Conway, R. Tripathi, R. Ravindra, S. Dube, V. Shankar, R. Jadeja, M. S. Dhoni (c & wk), R. Ashwin, N. Ahmad, A. Kamboj, K. Ahmed. https://t.co/gPLIYGimQn #CSKvKKR #TATAIPL #IPL2025
— IndianPremierLeague (@IPL) April 11, 2025
CSK vs KKR: சிஎஸ்கே vs கேகேஆர் பிளேயிங் லெவன்
ஆனால், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் அஜிங்கயா ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதில் மொயின் அலி உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் சௌத்ரி ஆகியோருக்கு பதில் ராகுல் திரிபாதி மற்றும் அன்ஷூல் கம்போஜ் பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
CSK vs KKR: தோனி வந்ததும் பெரிய மாற்றம்
நீண்ட நாளாக அன்ஷூல் கம்போஜை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வந்தன. தற்போது தோனி கேப்டனாக வந்ததும், அன்ஷூல் கம்போஜ் அணிக்குள் வந்துவிட்டார். அவரால் சிஎஸ்கேவின் பந்துவீச்சு யூனிட்டில் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அன்ஷூல் கம்போஜை சேர்ந்து சிஎஸ்கே அணியால் இந்த சீசனில் மட்டும் 18 வீரர்கள் பயன்படுத்தப்பட்டுவிட்டனர். 6 வீரர்கள் மட்டுமே இன்னும் பிளேயிங் லெவன் வாய்ப்பை பெறவில்லை எனலாம்.
CSK vs KKR: ஏன் முதலில் பேட்டிங்?
டாஸில் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில்,”நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் சேஸிங் செய்ய முயற்சித்தோம், ஆனால் நாங்கள் உணர்ந்தது என்னவென்றால், ஆடுகளம் கொஞ்சம் மெதுவானதாக மாறுகிறது. எனவே நீங்கள் நல்ல ஓபனிங்கை பெறவில்லை என்றால், மிடில் ஆர்டர் அழுத்தத்திற்கு உள்ளாகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் விலகல் குறித்து பேசிய தோனி,”அவரது முழங்கையில் ஏதோ எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, எனவே அவர் தொடரில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அவர் மிகவும் திறமையான பேட்டர், பந்தை நல்ல டைமிங்கில் அடிப்பவர். எனவே, அவரை பெரியளவில் தவறவிடுகிறோம்.
CSK vs KKR: அடிப்படைகளை சரியாக செய்வது முக்கியம்
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் முக்கியத்துவம் குறித்து கேள்விக்கு, “இப்போது அது (வெற்றி) முக்கியம், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். நாங்கள் பல போட்டிகளில் தோற்றுள்ளோம், இப்போது அடிப்படையான விஷயங்ளை சரியாக செய்வது முக்கியம். பந்துவீச்சில் டாட் பால்களை அதிகமாக்குவது, வரும் கேட்சுகளை சரியாக எடுப்பது.
இரண்டு ஆட்டங்களில் நாங்கள் பெரிய வித்தியாசத்தில் தோற்றோம், ஆனால் அனைத்தும் சிறு வித்தியாசங்களில்தான். ஒரு ஓவர் 20 ரன்களுக்கு செல்வது பற்றி. எங்கள் பேட்டர்கள் பேட்டர்களாக மிகவும் திறமையானவர்கள், அவர்கள் எல்லா பந்துகளையும் அடிக்க முற்பட மாட்டார்கள். அவர்கள் தங்கள் உள்ளுணர்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நன்றாகத் தொடங்குவது, ஆரம்பத்தில் பவுண்டரிகளை அடிப்பது மற்றும் பந்துவீச்சில் தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுக்க முயற்சிப்பது முக்கியம்” என்றார்.