சிஎஸ்கே அணிக்குள் வரும் இளம் வீரர் இவரா? கேப்டன் தோனியின் பிளான்

CSK Latest News : ஐபிஎல் 2025 தொடரில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார் எம்எஸ் தோனி. கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியதால், தோனியிடம் கேப்டன்சி பொறுப்பு மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையப்போதுவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர் இணையலாம் என கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியில் இளம் வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிருத்திவி ஷா சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் ஆடக்கூடிய ஒரு வலுவான பேட்ஸ்மேன் தேவை. அதுவும் வலது கை பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என சிஎஸ்கே எதிர்பார்க்கிறது. ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன். அவருக்கு மாற்றாக இன்னொரு ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் வேண்டும் என்பதால் அந்த இடத்துக்கு பிருத்திவி ஷா பொருத்தமானவராக இருப்பார். சிஎஸ்கே ஆலோசனையிலும் அவர் பெயர் இருப்பதாகவே தெரிகிறது.

வெளிநாட்டு பிளேயர்கள் வர வாய்ப்பு?

வெளிநாட்டு பிளேயர்கள் சிலரின் பெயர் அடிபட்டாலும், ஏற்கனவே டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, பத்திரனா, நூர் அகமது ஆகியோர் வெளிநாட்டு பிளேயர்களுக்கான ஸ்லாட்டுகளில் உள்ளனர். அவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு இன்னொரு பிளேயரை சேர்க்க சிஎஸ்கே அணிக்கு விருப்பம் இல்லை. ஒரு வாய்ப்பு என்றால் டெவோன் கான்வேவுக்கு பதில் வேறு பிளேயரை வேண்டுமானால் சேர்க்கலாம். ஆனால் அந்த முடிவை சிஎஸ்கே எடுக்காது என்பதால் வெளிநாட்டு பிளேயர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக சேர்க்கப்பட மாட்டார்கள். அதனால் பிரித்திவி ஷா உள்ளிட்ட இந்திய பிளேயர்கள் யாரேனும் ஒருவரே சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே ஐபிஎல் 2025

நடந்து வரும் ஐபிஎல் 2025 தொடரை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. இதனை சரி செய்ய அணி நிர்வாகம் பகீரத முயற்சி எடுத்து வருகிறது. 5 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதை தவிர 4 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. பிளேஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் 6 முதல் 7 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. தோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றிருப்பதால் சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.