புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதி வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் சோதனையில் இது புரளி என தெரியவந்தது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதி வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு நேற்று காலையில் தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால், அந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, இது வெறும் புரளி என தெரியவந்தது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.