பீகார்: மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் பலி

பாட்னா,

பீகாரில் நேற்று பல இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 25 பேர் பலியானார்கள்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், மின்னல் தாக்கியதில் நாளந்தாவில் 18 பேரும், சிவானில் 2 பேரும், கதிஹார், தர்பங்கா, பெகுசராய், பாகல்பூர் மற்றும் ஜெகனாபாத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பீகாரின் மின்னல் தாக்கி நேற்று முன்தினம் 13 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.