சென்னை : போலியான பெயர் முகவரி விபரம் கொடுத்து ஒரு நபர் 2 பவுன் எடையுள்ள போலி நகையை தங்க நகை எனக் கூறி அடமானம் வைத்து ரூபாய் 85 ஆயிரம் மோசடியாக பெற்ற விவகாரத்தில், சென்னையைச்சேர்ந்த 3 பேரை புதுச்சரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் 2 இடங்களில் போலி நகையை வைத்து பணம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், அவர்களை தேடி வந்த புதுச்சேரி காவல்துறையினர், இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். […]
