சென்னை: அதிமுக பாஜக கூட்டணி குறித்த எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாஜகவின் கொள்கைகள் தமிழகத்திற்கு எதிரானது என்றும், அதிமுக முடிவை தமிழக மக்கள் ஏத்துக்கமாட்டாங்க என நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார். இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்த தோழமை கட்சியான எஸ்டிபிஐ கட்சி, அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விரைவில், திமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. அதிமுக பாஜக […]
