சிஎஸ்கே பேட்டர்கள் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறுகிறார்களா? விளாசிய முன்னாள் வீரர்!

Srikanth Slams CSK: 18வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 5 போட்டிகள் விளையாடி உள்ளன. எப்போது ஐபிஎல் போட்டிக்கென ஒருசில வழக்கம் உண்டு. அதில் ஒன்று எல்லா ஐபிஎல் சீசன்களிலும் சென்னை, மும்பை போன்ற அணிகள் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும். ஆனால் இம்முறை மாறாக நடந்து வருகிறது, 

சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரிய அணிகள் படுதோல்விகள் அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சிஎஸ்கே அணி தொடர்ந்து 5 தோல்விகளை தழுவி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் சென்னை அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டி உள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீகாந்து, சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தோல்வி அடைந்து வருகிறது. பவர் பிளேவில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்வதை பார்த்தால் ஏதோ டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி எடுப்பது போல் உள்ளது. இது எல்லாம் சரிப்பட்டு வராது. வெற்றி பெற வேண்டும் என்றால் எதிர்பார்க்காத சில யோசனைகளை வைத்திருக்க வேண்டும். 

ருதுராஜுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக விலை போகாத வீரர்களை அணியில் எடுக்கலாம். பிரித்விஷா போன்ற வீரர்களை இப்போது எடுத்து பயன்படுத்தலாம். உத்திகளை வகுப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக செயல்படுகிறது என ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டி உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த போட்டி முதல் தோனி தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அவரது தலைமையில், சிஎஸ்கே அணி வெற்றி பெற தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவியது. இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில், லக்னோ அணியை எதிர்கொள்கிறது. மேலும், வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் கட்டாயத்தில் உள்ளது. 

மேலும் படிங்க: சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கா, இல்லையா?

மேலும் படிங்க: தோனியை கிண்டலடித்த வீரேந்திர சேவாக் – வீடியோ வைரல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.