சென்னைக்கு எதிரான வெற்றி …கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியது என்ன ?

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது. சென்னை தரப்பில் துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 44 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் ஐ,பி.எல். தொடரின் தனது 3 வெற்றியை பதிவு செய்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தொடர்ந்து 5 -வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் சென்னைக்கு எதிரான வெற்றி தொடர்பாக கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியதாவது,

எங்களுக்கு திட்டங்கள் இருந்தன. நான் கடந்த இரண்டு வருடங்களாக இங்கு விளையாடி வருகிறேன், மொயீனும் அப்படித்தான்.. பெருமை ஸ்பின்னர்களுக்குச் செல்ல வேண்டும் , இன்று எங்கள் திட்டங்கள் நன்றாக வேலை செய்தன.

மொயீன் நன்றாக விளையாடினார் – ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாடிவிட்டு பின்னர் தவறவிட்டு, பின்னர் மீண்டும் களமிறங்குவது ஒருபோதும் எளிதானது அல்ல. . மொத்தத்தில் ஒரு நல்ல பந்துவீச்சு செயல்திறன். நான் என் பேட்டிங்கை ரசிக்கிறேன், கடந்த 2-3 ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். இந்த நேரத்தில் அதை மிகவும் எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன்.

கடைசி ஆட்டம் எங்களுக்கு கடினமாக இருந்தது, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. நிறைய கற்றுக்கொண்டோம் , இப்போது நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம்.என தெரிவித்தார் .


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.