தோனியை கிண்டலடித்த வீரேந்திர சேவாக் – வீடியோ வைரல்

MS Dhoni, Virender Sehwag : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்து. இதுகுறித்து ஹிந்தி கமெண்டரியில் தொலைக்காட்சியில் பேசிய வீரேந்திர சேவாக், தோனி பேட்டிங் ஆடிய விதம் குறித்து கிண்டலாக கூறினார். அவர் தோனியை கிண்டலடித்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடி வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியில் பேட்டிங்கில் யாரும் பெரிதாக ரிஸ்க் எடுத்து ஆடவில்லை. எல்லோரும் சீக்கிரம் கேட்ச் கொடுத்து அவுட்டாகிக் கொண்டே இருந்தனர். இதனால் ஒரு பார்ட்னர்ஷிப் கூட ஒழுங்காக அமையவில்லை. தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 9வது விக்கெட்டு களமிறங்கி வெறும் 1 ரன் எடுத்து அவுட்டானார். 

எளிய சேஸிங்கை நோக்கி ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது மிகப்பெரிய மோசமான தோல்வியாகவும் அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 10 ஓவர்கள் வித்தியாசத்தில் எந்தவொரு அணியும் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது இல்லை. அதேபோல், இந்த சீசனில் சிஎஸ்கே தொடர்ச்சியாக பெற்ற 5வது தோல்வியாகும். இதற்கு முன்பு அந்த அணி தொடர்ச்சியாக இவ்வளவு தோல்விகளை பெறவில்லை. சிஎஸ்கேவுக்கு இதுவே முதன்முறையாகும். 

இதுகுறித்து ஹிந்தி கமெண்டரியில் பேசிக் கொண்டிருந்த வீரேந்திர சேவாக், தோனியையும் கிண்டலடித்தார். சிஎஸ்கே பேட்டிங்கை பார்க்கும்போது அந்தளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தோனி இருந்திருந்தால்கூட பெரிய ஸ்கோர் எல்லாம் வந்திருக்காது. அதிகபட்சமாக 130 ரன்கள் அடித்திருப்பார்கள். அதற்குமேல் எல்லாம் போய் இருக்காது. நாமும் இவ்வளவு சீக்கிரம் கமெண்டரிக்கு வருவதற்கு பதிலாக கொஞ்சம் லேட்டாக வந்திருப்போம். மற்றபடி கேகேஆர் அணியே வெற்றி பெற்றிருக்கும் என கூறினார்.

வீரேந்திர சேவாக்கின் இந்த கிண்டலான பேச்சு சிஎஸ்கே ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. மேலும், தோனி தன்னை இந்திய அணியில் இருந்து நீக்கிவிட்டார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சேவாக், தோனி மீது வன்மத்தை கொட்டி வருவதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 5ல் தோல்வியை தழுவியிருக்கிறது. இனி எஞ்சியிருக்கும் 8 போட்டிகளில் 6 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.