சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன். தான் தென்றலாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு விழா, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை (ஏப்ரல்.12) கோலாகலமாக நடைபெற்றது. இதில், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், சரத் குமார் உள்பட முக்கிய நிர்வாகிகள், கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி பாஜக. 1000க்கும் மேற்பட்ட சட்டமன்ற […]
