பச்சை ஜெர்ஸி போட்டா… ஆர்சிபிக்கு லக்கியா… அன்லக்கியா… புள்ளிவிவரங்கள் இதோ!

RCB Green Jersey Match: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணி நடப்பு ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கியிருக்கிறது எனலாம். 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் வென்றுள்ளது, இரண்டில் தோற்றுள்ளது.

கேகேஆர் அணியை கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸிலும், சிஎஸ்கே அணியை சென்னை சேப்பாக்கத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பை வான்கேடவிலும் ஆர்சிபி அணி வென்றிருக்கிறது. ஆனால், ஹாம் மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகளிடம் தோற்றுள்ளது.

RCB Green Jersey: ராஜஸ்தானுக்கு எதிராக பச்சை நிற ஜெர்ஸி

சின்னசாமி மைதானத்தை தவிர்த்து அவே போட்டிகளில் வெற்றி பெற்று வருவதால் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி இருக்கிறது. இந்த சூழலில் நாளை (ஏப்ரல் 13), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆர்சிபி (RR vs RCB) எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்ஸியை (RCB Green Jersey) அணிந்து விளையாட இருக்கிறது.

RCB Green Jersey: ஆர்சிபி பச்சை நிற ஜெர்ஸி போடுவது ஏன்?

ஆர்சிபி அணி 2011ஆம் ஆண்டில் இருந்து இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறது. அதாவது, ஒரு சீசனில் ஒரு போட்டியில் மட்டும் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்ஸியில் விளையாடும். Go Green முன்னெடுப்பான இதில் மரம் வளர்ப்பு மற்றும் புவி வெப்பமடைதலின் தாக்கத்தை குறைக்கும் நோக்கிலும் ஒரு விழிப்புணர்வுக்காக இந்த விஷயத்தை ஆர்சிபி ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றி வருகிறது.@RCBTweets

The all-new 2025 #PUMAxRCB green jersey is designed to make an impact beyond the pitch. Get yours at https://t.co/ceZlPTzRfn, App, Stores and RCB Website.#PUMAxRCB pic.twitter.com/qvy5PsIHGP

— PUMA Cricket (@pumacricket) April 11, 2025

முழுமையாக, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களின் மூலம் ஆர்சிபி அணியும் இந்த பச்சை நிற ஜெர்ஸி தயாரிக்கப்படும். பெரும்பாலும் இந்த முன்னெடுப்பை பெங்களூவில்தான் ஆர்சிபி அணி முன்னெடுக்கும். ஆனால், ஐபிஎல் வரலாற்றில் 5வது முறையாக பெங்களூருவுக்கு வெளியே பச்சை நிற ஜெர்ஸி அணிந்து ஆர்சிபி விளையாட இருக்கிறது.

RCB Green Jersey: ஆர்சிபி புள்ளிவிவரங்கள் இதோ

இதுவரை 14 போட்டிகளில் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்ஸி அணிந்து விளையாடி உள்ளது. ஆனால் வெறும் 4 போட்டிகளில்தான் ஆர்சிபி வென்றிருக்கிறது. 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது, 1 போட்டி முடிவின்றி ரத்தாகி உள்ளது. 

2011ஆம் ஆண்டில் முதல்முறையாக ஆர்சிபி அணி கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக பச்சை நிற ஜெர்ஸி அணிந்து விளையாடியது. அந்த போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வென்றது. 2016, 2022, 2023 சீசன்களில் பச்சை நிற ஜெர்ஸி அணி ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கிறது.

பச்சை ஜெர்ஸி அணிந்து அதிகபட்சமாக 2016இல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 248/3 ரன்களை ஆர்சிபி அடித்தது. குறைந்தபட்சமாக, 2021இல் கேகேஆர் அணிக்கு எதிராக 92 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பச்சை ஜெர்ஸியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியவர் ஏபி டிவில்லியர்ஸ் ஆவார், அவர் 2016ஆம் ஆண்டில் குஜராத்திற்கு எதிராக 52 பந்துகளில் 129 ரன்களை அடித்தார். பச்சை ஜெர்ஸியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியவர், ஹசரங்கா ஆவார். 2022இல் 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதைப் போல், கோவிட் காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக நீல நிற ஜெர்ஸியில் ஆர்சிபி அணி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.