நெல்லை: பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர் அமைச்சர் பொன்முடி. இவரைப்போன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் காட்டகமாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் காளியம்மாள். இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. எதிர்க்கட்சிகளை ஆதாரத்தோடு, கலை நயத்துடன் விமர்சிப்பதில் தேர்ந்தவர் காளியம்மாள். அதனால் அவரது கூட்டதுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. சமீபத்தில், காளியம்மாள் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான […]
