விருதுநகர்: ராட்டினத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்ணுக்கு என்ன ஆனது? வைரல் வீடியோவின் பின்னணி

விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ். பள்ளி வளாகத்தில் 77-வது ஆண்டு தனியார்ப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 28.3.2025-ல் தொடங்கிய பொருட்காட்சி வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு குழந்தைகளைக் கவரும் விதமாக ரயில் வண்டி, ஜம்பிங் ப்ராக், பலூன் விளையாட்டுகள், உள்ளரங்கு விளையாட்டு,

பெண்கள், ஆண்களைக் கவரும் விதமாக திரில்லிங் விளையாட்டுகள், ராட்சத ராட்டினங்கள், ஆக்டோபஸ், ஸ்பிரிங் ரோலர், பேய் வீடு, அக்வோரியம், ஸ்நோ ஹவுஸ் உள்படப் பல உள்ளன.

அந்தரத்தில்..

உள்ளூர் விடுமுறையை உற்சாகமாகக் கழிக்கும் விதம் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சியில் ருசித்து மகிழ, பல வித உணவு ஸ்டால்கள், கேளிக்கை அரங்குகள், பேன்ஸி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கடைகள், ஆர்க்கெஸ்ட்ரா என ஏராளம் உள்ளன.

இந்தநிலையில், கே.வி.எஸ். பள்ளி மைதான பொருட்காட்சியில் தலைகீழாகச் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத ராட்டினத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

அந்தவகையில், விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த கௌசல்யா என்ற இளம்பெண் அந்த ராட்டினத்தில் ஏறி பயணம் செய்தார்.

ராட்டினம் சுழல ஆரம்பித்த நேரத்திலிருந்தே கௌசல்யா தனது இருக்கையில் பாதுகாப்பாக உணர முடியாத அளவுக்கு வழுக்கிக்கொண்டே இருந்தார்.

இந்தநிலையில் ராட்டினம் தலைகீழாகச் சுழன்று மீண்டு திரும்புகையில் திடீரென கௌசல்யா இருக்கையில் இருந்து அந்தரத்தில் வெளியே தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு விருதுநகரில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையில் கௌசல்யா, ராட்டினத்திலிருந்து தவறி கீழே விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இந்தச் சம்பவத்தையடுத்து சிறிது நேரத்திற்கு ராட்டினம் இயக்குவதற்குத் தடைவிதிக்கப்பட்டது.

ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்தது குறித்து போலீஸார்‌ விசாரிக்கையில், ஆட்டோமேட்டிக் லாக், மேனுவல் லாக் என இரண்டு லாக்குகளில் கௌசல்யா மேனுவல் லாக் செய்யவில்லை.

இதனாலேயே அவர் ராட்டினத்திலிருந்து தவறிவிழுந்து விபத்துக்குள்ளானதற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.