‘சென்னை தோல்வி!’
சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டார்கெட்டை சேஸ் செய்த கொல்கத்தா அணி மிக எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

‘ஹர்ஷா போக்லே கருத்து!’
சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு அணியில் ரெய்னா, பத்ரிநாத் போன்ற வீரர்கள் இல்லாததுதான் காரணம் என வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே பேசியிருக்கிறார்.
ஹர்ஷா போக்லே கூறியிருப்பதாவது, ‘சென்னை அணி மிகவும் வெற்றிக்கரமாக இருந்த ஒரு காலத்தில் அவர்கள் சீக்கிரம் விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருக்கும் போது, இன்னிங்ஸை சரிசெய்வதற்காக மட்டுமே ஒரு வீரரை பயன்படுத்தினர். அவர்தான் பத்ரிநாத்.
ஏதோ ஒருசில போட்டிகளில் மட்டும்தான் அவர் முன்னரே இறக்கப்படுவார். அதுதான் அப்போது சென்னை அணியின் பேட்டிங் பலம். இப்போது உள்ள அணியில் அத்தகைய பலம் என்பது இல்லை. அதனால்தான் பவர்பிளேயில் ரொம்பவே defensive ஆன அணுகுமுறையுடன் விளையாடுகிறார்கள். அங்கேயே போட்டியையும் இழந்து விடுகிறார்கள்.
ஏலத்தின் போது ஒரு சிறந்த இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை அவர்கள் எடுக்கத் தவறியதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். சுரேஷ் ரெய்னா போன்ற வீரரின் மகிமை என்ன என்பது இப்போது நமக்கு புரிகிறது.’ எனக் கூறியிருக்கிறார்.
ஹர்ஷா போக்லேவின் கருத்தைப் பற்றிய உங்களின் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள்.