அமெரிக்காவின் பழிவாங்கும் வரிகளால் உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் சுருங்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். கடந்த வாரம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். பின்னர் வெள்ளை மாளிகை நிர்வாகம் சீனாவைத் தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்படும் அனைத்து வரிகளுக்கும் 90 நாள் இடைநிறுத்தம் அறிவித்தது. டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் வர்த்தக முறைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். […]
