உத்தரகாண்டில் அண்ணாமலை ஆன்மிக பயணம்: இமயமலை செல்லவும் திட்டம்

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை 3 நாள் ஆன்மிக பயணமாக நேற்று உத்தரகாண்ட் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து இமயமலை செல்லவும் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பாஜக அமைப்பு தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதேமேடையில், அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அவருடன் சேர்ந்து, சரத்குமார், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்ட பலருக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அண்ணாமலை நேற்று 3 நாள் ஆன்மிக பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற அவர், அங்கிருந்து உத்தரகாண்ட் சென்றிருப்பதாக பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புனித தலங்களில் அண்ணாமலை வழிபாடு செய்ய இருப்பதாகவும், பின்னர், அங்கிருந்து இமயமலை சென்று, அவர் தியானத்தில் ஈடுபட இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். 3 நாள் ஆன்மிக பயணம் முடிவடைந்து டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்திக்கவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

விரதத்தை கைவிட கோரிக்கை: இதனிடையே அண்​ணா​மலை எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கும், மக்​கள் விரோத திமுக ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​புவோம் என்ற உறு​தி​யோடு, கடந்த 4 மாதங்​களாக, நான் உட்பட தமிழக பாஜக சகோதர சகோ​தரி​கள் பலரும், காலணி அணி​யாமல் விரதத்தை மேற்​கொண்டு வரு​கிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்​டணி திமுக ஆட்​சியை நிச்​ச​யம் அகற்​றும் என்ற உறு​தி​யுடன், காலணி அணி​யத் தொடங்​கி​யிருக்​கிறேன்.என்​னுடன் விரதம் மேற்​கொண்டு வந்த தமிழக பாஜக சகோதர சகோ​தரி​கள், கடின உழைப்பை வழங்க வேண்​டிய தேவை இருக்​கிறது. ஆகவே, அண்​ணன் நயி​னார் நாகேந்​திரனின் அன்பு அறி​வுறுத்​தலை ஏற்​று, அனை​வரும் தங்​கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.