10 நாட்களுக்கு முன்பு எண்ணூர் அருகே உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இரண்டு கன்டெய்னர்களில் இருந்து ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளைக் கொள்ளையடித்த வழக்கில் ஏழு பேர் கொண்ட கும்பலை ஆவடி நகர காவல்துறை கைது செய்துள்ளனர். மார்ச் 30 அன்று லண்டனில் இருந்து சென்னை வந்திறங்கிய இந்த கன்டெய்னர்களை இறக்குமதி செய்த நிறுவனம், ஏப்ரல் 3ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தங்கள் கிடங்கிற்கு கொண்டு சென்ற நிலையில் அதன் சீல் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. […]
