கருண் நாயர் அதிரடி வீண்.. தட்டித் தூக்கிய மும்பை இந்தியன்ஸ்.. டெல்லி அணிக்கு முதல் தோல்வி!

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், இத்தொடரின் 29வது லீக் ஆட்டம் இன்று டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அணி 75 ரன்கள் எடுத்த நிலையில், ரிக்கில்டன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ரன்களை சேர்க்க தொடங்கினர். 

ஒரு கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 40 ரன்களில் ஆட்டமிழக்க, திலக் வர்மா அரைசதம் எடுத்து 59 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் நமன் தீர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் விப்ராஜ் மற்றும் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணி 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கினர். ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் இவரைத் தொடர்ந்து வந்த கருண் நாயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்துச் சென்றார். ஆனால் அது வீணானது. அபிஷேக் சர்மா – கருண் நாயர் பார்ட்னர்ஷிப் உடைய டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கருண் நாயர் 80 ரன்களிலும் அபிஷேக் சர்மா 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அவரை தொடர்ந்து கே எல் ராகுல் 15, அக்சர் படேல் 9, ஸ்டப்ஸ் 1, விப்ராஜ் 14, அசுதோஷ் சர்மா 17 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் டெல்லி அணி 193 ரன்களில் அல் அவுட் ஆனது. டெல்லி அணி வெற்றி பெறும் என நினைத்த நிலையில், இறுதி கட்டத்தில் விக்கெட்களை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கரன் சர்மா இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அவர் 3 விக்கெட்களை கைப்பற்றினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 2வது வெற்றி ஆகும். 6 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று தற்போது 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

மேலும் படிங்க: சிஎஸ்கே அணி வெற்றி பெற பிளேயிங் 11ல் என்ன மாற்றத்தை செய்ய வேண்டும்!

மேலும் படிங்க: ஃபில் சால்ட் – விராட் கோலி அதிரடி.. ஆர்சிபி-க்கு ஈசி வின்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.