சமூக வலைத்தளம் மூலம் சமீக காலமாக அதிகமான காதல் நட்புகள் உருவாகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் தர்ஷன்.
நந்துர்பரில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் தர்ஷனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் எம்.பி.பி.எஸ் படிக்கும் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.
இதையடுத்து அப்பெண் டாக்டரை கேரளாவிற்கு விடுமுறைக்காக தர்ஷன் அழைத்துச் சென்றார். அங்கு ஹோட்டல் அறையில் வைத்து பெண் டாக்டரை தர்ஷன் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பிறகு நாக்பூரிலும் உறவு வைத்துக்கொண்டார். மேலும் தர்ஷன் வேலைக்கு சேரும் முன்னர் அவருக்கு தேவையான நிதியுதவியை அந்த பெண் டாக்டர் செய்து வந்தார். அத்துடன், தர்ஷனின் தாயாரின் மருத்துவ செலவுக்கும் பணம் கொடுத்து உதவினார்.

ஆனால் ஐ.பி.எஸ்.பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு தர்ஷனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தர்ஷன் ஐதராபாத்தில் பயிற்சிக்கு சென்றார். அங்கு பெண் டாக்டர் சென்றபோது அங்கு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தர்ஷனிடம் அப்பெண் டாக்டர் தன்னை திருமணம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
ஆனால் தர்ஷன் திருமணம் செய்ய மறுத்தார். அதோடு சாதிப்பெயரை சொல்லி பெண் டாக்டரை திட்டினார். இரண்டு ஆண்டுகளாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து சித்ரவதையை அனுபவித்து வந்த அப்பெண் டாக்டர் தற்போது போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தர்ஷன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
