பேராசிரியர் தமிழவன், பதிப்பாளர் ப.திருநாவுக்கரசுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது அறிவிப்பு

90 சிறுகதைகள், 2 நாவல்கள் மற்றும் 47 கட்டுரைகள் எழுதி தனக்கென தனி முத்திரைப் பதித்தவர் எழுத்தாளர் மா.அரங்கநாதன். அவரது நினைவை ஓட்டி 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 6-ம் தேதி மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படுகின்றன.

அதன் அடிப்படையில், மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2025 பேராசிரியர் தமிழவன், ப. திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது.

மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2025

அண்ணா சாலையில் இருக்கும் ராணி சீதை அரங்கத்தில், 16.04.2025 அன்று மாலை 6.15 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்வை அறிவியல் எழுத்தாளரும், திரைப்பட விமர்சகருமான சுஜாதா நடராஜன் தொகுத்து வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

அவரைத் தொடர்ந்து, விருதுகள் வழங்கி, மா.அரங்கநாதன் – ‘மூன்றில் வலைதளங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார் உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க.மகாதேவன். அதற்குப் பிறகு பேராசிரியர் தமிழவன், ப.திருநாவுக்கரசு இருவரும் ஏற்புரை நிகழ்த்துவார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.